Important Notes :- UG Admission 2026-2027 Special Category Ranklist Ex-Servicemen Category | Disabled Category | Andhaman Nicobar Category | NCC Category | Security Forces Category | Sports Category | Course-wise Rank list : Tamil | English | BBA | Commerce | Computer Applications | Computer Science | Economics | Maths | UG - PG முதலாம் ஆண்டு கல்லூரி அனுமதி சேர்க்கைக்கு சார்ந்த துறை தலைவர்களை அனுகுமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள், முதல்வர் | வரும் கல்வி ஆண்டில் 2026-27 மாணவர்கள் சேர்க்கைகான (M.A.English, M.Com, M.sc Computer science, M.sc Mathematics ) விண்ணப்ப பதிவு 20-6-2025 முதல் tngasa.in மூலம் விண்ணப்பிக்கலாம். | Important Notes :- வரும் கல்வி ஆண்டில் 2025-26 மாணவர்கள் சேர்க்கைகான விண்ணப்ப பதிவு 7-5-2025 முதல் 27-5-2025 வரை கல்லூரியில் சேர்க்கை உதவி மையம் (AFC) மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகிறது. | UNDER ADMISSION 2025-26 :- 1. ADMISSION GUIDELINES 2025-2026 | 2. PROSEPECTUS | 3. FEES STRUCTURE 2025- 26
+91 431 2905029
princibui@bdu.ac.in

போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்

Loading Events

« All Events

  • This event has passed.

போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்

October 7 @ 8:00 am - 5:00 pm

போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் திருவரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
07.10.2026 அன்று காலை 11.00 மணிக்குக் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கமாகக் கல்லூரி முதல்வர் முனைவர் பி.டேவிட் லிவிங்ஸ்டன் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள்.

தனது தலைமையுரையில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நம் கல்லூரியில் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும், மாணவர்களின் நலனில் அக்கறையும் , சமூக வளர்ச்சியில் ஆர்வமும் உள்ள நாம் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வைக் கொண்டு சேர்ப்பதைக் கடமையாகச் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.

தமிழகத்தில் 1.50 கோடி இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் எதிர்கால தமிழகத்தின் தூணாக விளங்குவார்கள். ஆகவே அவர்களுடைய நலனில் நாம் கவனம் செலுத்துவது என்பது இந்த சமூகத்தின் வளர்ச்சியின் மீது கவனம் செலுத்துவதாகும் என்று குறிப்பிட்டார்கள். அறிவில் வளர்ந்த ஒரு சமூகம், நாகரிகம் பெற்ற ஒரு சமூகம், போதைக்கு அடிமையாகாமல், அதிலிருந்து விலகி இருப்பதே அந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும் என்று குறிப்பிட்டார்கள்.

படிக்கின்ற மாணவ– மாணவிகள் போதைப் பொருள் சார்ந்த தீய பழக்க வழக்கங்களில் இருந்து விடுபடுவது தன் சார்ந்த குடும்பத்திற்குப் பொருளாதார வளர்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தும் என்றும் அதனால் தன்னிறைவு பெற்ற ஒரு குடும்பமாக வாழ முடியும் என்றும் குறிப்பிட்டார்கள்.

மேலும் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாணவ, மாணவிகளின் எதிர்கால இலக்குகளை மிக துல்லியமாக அடைவதற்கும் அவசியம் பயன்படும் என்று கூறினார்கள்.

தொடர்ந்து ராம்ஜி நகர் காவல் ஆய்வாளர் திரு. அ. பிரபு அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள்.
மாணவ, மாணவிகளுக்குப் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி கூறினார்.
எதிர்கால இந்தியா இன்றைய இளைஞர்கள் கையில். அதை நாம் பழுதாக்கி விடக்கூடாது என்பதை எடுத்துரைத்தார்.
மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை நாம் பயன்படுத்துவது சமுதாயத்திற்குப் பெரும் கேடாக அமையும் என்றும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்ப கட்டமைப்பும் இதனால் சீர்குலைந்து போகும் என்றும் குறிப்பிட்டார்கள்.

இது போன்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்துவதால் கல்லூரிக்கும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கும் ஒரு புதிய பாதையை உருவாக்கி அதில் பயணிக்க வேண்டியதன் புரிதலை ஏற்படுத்தும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய காவல் உதவி ஆய்வாளர் ந.வாசுதேவன் அவர்கள் இளைய சமுதாயம் தெளிவாகப் பயணிக்க வேண்டிய கட்டாய சூழலில் தள்ளப்பட்டு இருக்கின்றோம். இதனை மனதில் கொண்டு இன்றைய இளைஞர்கள் போதைப் பொருளுக்கு ஆளாகாமல் தம்மைத்தானே தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.

தொடர்ந்து பேசிய மது விலக்குப் பிரிவு காவலர்கள் ந.மாசிலாமணி, நாராயணன் ஆகியோர் மாணவிகள் கேட்ட வினாக்களுக்குப் பதில் அளித்தனர். இந்நிகழ்வில் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவ– மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் துரை. மணிகண்டன் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.

முனைவர் மா.நர்மதா அவர்கள் நன்றி உரையாற்றினார்கள்.

மேலும் நிகழ்வில் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ஆ.ஜெகதீசன் அவர்களும் உடற்கல்வித் துறை இயக்குனர் பொறுப்பு முனைவர் பெ. முருகானந்தம் அவர்களும் வணிக நிர்வாகவியல் துறை தலைவர் முனைவர் பாலாஜி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Details

  • Date: October 7
  • Time:
    8:00 am - 5:00 pm