- This event has passed.
முத்தமிழ் விழா போட்டிகளில் ஸ்ரீரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர் சாதனை

23.09.2026 அன்று திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரியின் தமிழாய்வுத் துறையில்
முத்தமிழ் விழா போட்டிகள் நடைபெற்றது.
இப் போட்டிகளில் தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை மாணவ- மாணவியர்களும் இப்போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, நடைபெற்ற போட்டிகளில்
கவிதைப் போட்டியில்
பி.ஏ தமிழ் முதலாமாண்டு மாணவி க.சுபா முதல் பரிசும்,
நடனப் போட்டியில்
க.ரஞ்சனி
ச.நர்மதா
சி.சுவேதா
ம.கிருத்திகா
ரா.வினோதினி
கோ.கலையரசி
ஆகியோர் இரண்டாம் பரிசும்,
குறுநாடகப் போட்டியில்
மா.ரம்யா
த.பாப்பாத்தி
கோ.கலையரசி
க.சுபா
சி.சத்யா
க.ரஞ்சனி
ஆகியோர் மூன்றாம் பரிசும் பெற்று, கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவியர்களைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பி.டேவிட் லிவிங்ஸ்டன் அவர்கள் பாராட்டி தமது வாழ்த்துக்களைத் தெரிவித்த போது கிராமபுறத்தைச் சார்ந்த அரசு கல்லூரி மாணவர்களும் சாதித்துக் காட்ட முடியும் என்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுவதாக தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்த் துறை தலைவர் முனைவர் ஆ.ஜெகதீசன் அவர்களும், தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் முனைவர் பெ. முருகானந்தம் அவர்களும், முனைவர் கா.ரங்கராஜன் அவர்களும், கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் ஞான ஜெயந்தி அவர்களும் வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் கண்ணப்பா அவர்களும் கலந்து கொண்டு வெற்றிபெற மாணவர்களைப் பாராட்டினர்.
இந்நிகழ்ச்சிக்கு மாணவர்களை ஒருங்கிணைத்த முனைவர் ரெ. குணசுந்தரி அவர்களுக்கும் வாழ்த்துக்களை முதல்வர் அவர்கள் தெரிவித்துக் கொண்டார்கள்.

